2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கிரானில் தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

தேசிய விளையாட்டு விழா மற்றும் தேசிய தமிழ்த் தினப் போட்டிகளுக்கு கிராம மட்டத்தில் தெரிவான மாணவர்களை பாராட்டும் விழா நேற்று மட்டக்களப்பு கிரான் மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

மகா வித்தியால அதிபர் என்.சுந்தரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இப்பாராட்டு விழாவில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களையும் பரிசில்களையும் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் பிரதி கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.இளங்கோவன், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான ருத்திரமலர், ஞான பாஸ்கரன், பொ.ரவீந்தின் மாவட்ட விளையாட்டு அதிகாரி வே.ஈஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .