2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

உங்களது கஷ்டங்கள் தெரியவரவில்லை: பெரிய புல்லுமலை இடம்பெயர்ந்தோரிடம் மில்ரோய் பெர்னாண்டோ

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எல்தேவ்)
 
இரண்டரை இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தபோது இருந்த கவனம் உங்களுடைய விடயங்களில் இருக்கவில்லை. 30 வருடங்களாக நடைபெற்ற பிரச்சினைகளுக்கும் அதன் பாதிப்புகளுக்கும் இருசாராரும் பொறுப்பாகும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான பெரிய புல்லுமலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் அப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள சிங்கள, தமிழ் மக்களை சந்தித்தபோது  மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.
 
மட்டு- அம்பாறை மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களான பெரிய புல்லுமலை, சிப்பிமடு, கோப்பாவெளி, சமகிபுர, பதியத்தலாவ போன்ற இடங்களிலிருந்து கடந்த கால யுத்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மகா ஓயா பிரதேச செயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ளனர்.
 
இந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் கூட்டமொன்று மகாஓயா, மொல்லையாகம ரஜமகா விகாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் நீங்கள் உங்களுடைய சொந்த இடங்களுக்கு சென்று இருந்தால் அங்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்போது நீங்கள் தங்கியுள்ள இடங்களில் இருக்க விரும்பினாலும் இருக்கலாம்.
 
உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது எங்களுடைய நோக்கமாகும். உங்களுடைய தேவைகள் குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள். நமது ஜனாதிபதியின் நோக்கத்துக்கு அமைவாக அனைத்து மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றவே செயற்பட்டு வருகிறோம் என்றார்.
 
பெரிய புல்லுமலை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், புல்லுமலைப் பிரதேசம் மிகவும் முக்கியமான பிரதேசம். ஏனென்றால் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து சந்தோசமாக வாழ்ந்த பிரதேசம் என்பதுடன் மிகவும் வளமான பிரதேசமும் கூட. துரதிஷ்ட வசமாக யுத்தம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டது. இங்கு மீளக்குடியேறிய உங்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டியது எங்களுடைய கடமை.
 
எங்களது மக்களிலும் பிழையுள்ளது. ஆரம்பத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு குடியமர வரும்படி சொன்னபோது யாரும் வரவில்லை. இப்பொழுது அனைவரும் வர விரும்புகின்றமை மகிழ்ச்சியான விடயம். இப்போது அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் வடக்குக்கு திருப்பப்பட்டுள்ளமையால்  மிகக்குறைந்தவிலேயே இங்கு வேலைகளைச் செய்ய முடிகிறது. வீட்டுத்  திட்டங்களையும் ஏனைய அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்காகவும் நாங்கள் பல்வேறு தரப்பினருடனும் கதைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
 
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடிவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வருகை தந்திருந்த அமைச்சர்கள் பெரிய புல்லுமலை பிரதேசத்திலுள் கொஸ்கொல்ல கிராமத்தையும் பார்வையிட்டனர்.


 
 


 


  Comments - 0

  • xlntgson Sunday, 29 August 2010 08:13 PM

    செய்தி தலைப்புடன் மாறுபடுகிறது: 'உங்களுடைய கஷ்டங்களை கூறுங்கள் நான் தெரிந்து கொள்ளவே வந்திருக்கிறேன், ஜனாதிபதிக்கு தெரிவிப்பேன்', என்று அமைச்சர் கூறுவது போலவே தெரிகிறது எனக்கு முழு செய்தியையும் வாசித்த பின். தட்டச்சில் பிழையா? உங்களுடைய குறைகளெல்லாம் தெரியும் நான் சும்மா வந்தேன் என்று சொல்வது போலல்லவா தலைப்பு இருக்கிறது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .