2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கல்வியியற் கல்லூரி நாளை மீண்டும் திறப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி மூன்றாந்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 30ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி கல்வியியற் கல்லூரி, இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டது. 30ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னர் மாணவர்கள் விடுதிகளுக்கு சமுகமழிக்க வேண்டுமென்றும் 31ஆம் திகதி வழமை போன்று நேரசூசியின் அடிப்படையில் விரிவுரைகள் நடைபெறுமென்றும் பிடாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கான புனித நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் மாணவர்கள் ஸஹர் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோன்பு திறப்பதற்கான இப்தார் ஏற்பாடுகளையும் கல்லுரி மேற்கொண்டுள்ளதாக விடுதி அத்தியட்சகர் ஏ.எல்.எம்.றமீஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .