2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பாவனைக்குதவாத காது குடம்பிகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப்பிரிவுக்கு உட்பட்ட கோட்டைக் கல்லாறில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பாவனைக்குதவாத ஒரு தொகை காது குடம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதாரப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டதாகவும் இதனை வெளிநாட்டிலிருந்து தருவித்தவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதரப்பிரிவினர் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத பொருட்களை கண்டுபிடிக்கும் வகையில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .