2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அரச நிறுவனங்களில் செவிப்புலனற்றோருக்குகான வசதிகளை ஏற்படுத்தக் கோரிக்கை

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செவிப்புலனற்றோர், அரச காரியாலயங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சைகை மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாதிருப்பதனால்  பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்குறைபாட்டினால் இம்மாவட்டத்தைச் அரச பணிமனைகளில் தாம் சைகை மூலம் தெரியப்படுத்தும் கோரிக்கைகள் முற்றாக நிறைவேற்றப்படுவதில்லை எனவும் அதேபோல் தமது தேவைகள் புரியாத நிலையில் அரச வைத்தியசாலைகளிலும் தமது வைத்திய தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை எனவும் செவிப்புலனற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இக்குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டது. 

விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தமது உரிமை கருதி இக்குறைபாட்டினை நீக்க முன் வர வேண்டும் எனவும் இவ்விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் தலைவர் ஜெயகாந்தன் குரூஸ் தலைமையில் 10ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்ற போது மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீர்த்த பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ்விழா செவிப்புலனற்றோர்களுக்கிடையே நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி, கலாச்சர நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இக்கூட்டத்தின் போது புதிய ஆண்டுக்கான தலைவராக எஸ்.விக்ரமன், செயலாளராக வை.ரஞ்சித் குமார், பொருளாளராக பீ.கஜதீரன் ஆகியோரும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினரும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .