2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மண்டூர் - மூங்கிலாறு பாலம் அமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மண்டூர் - மூங்கிலாறு (கம்பியிறக்கம்) பாலத்தினைக் கட்டுவதற்குரிய சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அதற்குரிய ஆரம்பக்கட்ட வேலைகள் யாவும் மிகவிரைவில் ஆரம்பிக்கப்டவுள்ளதாகவும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் பிரதியமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்படி அமைச்சுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற    ங்களின் தேவைகளை எடுத்தியம்பும் முகமாக மாவட்டத்திலிருந்து குழு ஒன்று விஜயம் செய்திருந்தது. அக்குழுவை அமைச்சரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் அமைச்சர் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பிரதியமைச்சர் கூறுகையில், மட்டக்கள்ப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான்கரை பிரதேச மக்களுக்கு அதிகளவு சேவைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி என பலவற்றையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.  இவை அனைத்தையும் நாம் படிப்படியாக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் ஊடாக மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .