2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர், (கே.எஸ்.வதனகுமார், ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை இன்று(4.9.2010) காலை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமானது. இவ் ஆலயத்தில் நாளை (5.9.2010) நடைபெறவுள்ள திருவிழாவையொட்டி இப்பாதையாத்திரை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாமங்கம் சகாய மாதா ஆலயத்திலிருந்து இன்று காலை 5.30மணிக்கு ஆரம்பமான பாதயாத்திரை மட்டக்களப்பு, இருதயபுரம் இருதய நாதர் ஆலயம், தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயம், புளியந்தீவு அண்ணம்மாள் ஆலயம், வீச்சுக்கல்முனை சந்தன மாதா
ஆலயம் ஆகிய ஆலயங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற ஆராதனைகளில் கலந்து கொணடதையடுத்து பக்தர்கள் நடையாக ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலயத்தை நோக்கி சென்றனர்.

புளியந்தீவு ஆலயத்தை பாதயாத்திரைசென்றடைந்தவுடன் அவ் ஆலயத்தில் வைத்து பக்தர்களை மட்டு. - திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

இப்பாத யாத்திரையில் 2,000 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்பாதயாத்திரை மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்த்தவ வாழ் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.

கடந்தகால யுத்த சூழ்நிலையை அடுத்து இரண்டாவது வருடமாக இப்பாதயாத்திரை மட்டக்களப்பிலிருந்து ஆயித்தியமலை ஆலயத்தை நோக்கி இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .