2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில் நடமாடும் சேவை

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பொலிஸ் நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது.

வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எஸ்.பொதுசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையின் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன உட்பட பொலிஸ் அதிகாரிகள்,அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.

காணமற்போன தேசிய அடையாள அட்டை,  காணமற்போன கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றுக்கான பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள் இப்பொலிஸ் நடமாடும் சேவையில் வழங்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நடமாடும் சேவையில் இலவச வைத்திய முகாமும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .