2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

த.தே.கூட்டமைப்பு எம்.பிகள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவ்பர்கான்)

மட்டக்களப்பில் கடந்தமாதம் நடைபெற்றநடைபெற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்  தொடர்பாக, காத்தான்குடி பொலிஸாரினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா,சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் .இரா.துரைரட்ணம், பட்டதாரிகள் சங்க தலைவர்ஆகியோர் மீது பொலிஸாரினால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மேற்படி ஐவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் மற்றும் பட்டதாரிகள் சங்க தலைவர் கே.ஜெயராஜ் ஆகியோர் மாத்திரமே ஆஜராகியிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை. இந்நிலையில்,அடுத்த மாதம் 12ம் திகதிக்கு நீதிபதி வீ.இராமகமலன் வழக்கை ஒத்திவைத்தார்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .