2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டமாவடியில் பதற்றத்தை ஏற்படுத்திய வர்த்தக சங்கத் தலைவரின் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று காலை ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹில்மியும் மற்றொரு வர்த்தகரும் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு பதற்றம் ஏற்பட்டது.

ஓட்டமாவடி பிரதான வீதியில் மற்றும் வர்த்தக நிலையங்களின் முன்பாக  குப்பைகள் காணப்படுவதாக தெரிவித்தே இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கடைகள் மூடப்பட்டதுடன் வாழைச்சேனை பொலிஸாருக்கெதிராக கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள ஓட்டமாவடி வர்த்தகர்கள் ஆயத்தமாகினர்.

எனினும் வாழைச்சேனை பொலிஸார் ஓட்டமாவடி வர்த்தகர்களுடன் பேசியதையடுத்து இவர்கலிருவரும் விடுவிக்கப்பட்டனர். அதையடுத்து கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .