2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

மீறாவோடையி அத்துமீறிய குடியேற்றங்கள் இல்லை - பிரதேச சபைத் தலைவர்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  மீறாவோடை தமிழ் கிராமத்தில் அத்துமீறிய குடியேற்றங்கள் எதுவும் இல்லை என வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் தா.உதயஜீவதாஸ் தெரிவித்துள்ளார்.  

 

குறித்த தமிழ் கிராமத்திலுள்ள அரச மற்றும் தனியார் காணிகளில் ஓட்டமாவடி பிரதேச முஸ்லிம்கள் குடியேறுதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் "வாழைச்சேனை - ஓட்டமாவடி தொடர்பான எல்லைப் பிரச்சினையே அங்கு காணப்பட்டது எனவும்  அதற்கும் தற்போது சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .