2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட நகைகள் மீட்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறில் திருடப்பட்ட மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் இன்று புதன்னிழமை காலை மீட்டுள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர் மானவடு தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் பல திருட்டுடன் இவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதானால் கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .