Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
எமது நாட்டின் அரசியல் சமூக சூழ்நிலைக்கு மத தத்துவங்களும் வழிகாட்டுதல்களும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்று ரமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கு புனிதமான ஈதுல் பிதர் பண்டிகையின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு மாத காலம் முழுவதும் இறை அச்சத்திற்காக நோன்பிருந்து தம்மை தூய்மை படுத்திக்கொண்டு கொண்டாடப்படும் இப்பண்டிகையானது. மனித வாழ்வியத்திற்கு தேவையான அடிப்படையான ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் கொண்டிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாக காண்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைகள் வெறும் கொண்டாட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சமய பண்டிகைகளும் அச்சமயம் சார்ந்த சன்மார்க்க நெறிகளை பண்டிகையின் ஊடாகவும் பிற சமய கடமைகள் ஊடாகவும் மானிட சமூகத்திற்கு நினைவூட்டி வழிநடத்துகின்றன.
அந்த வகையில் புனிதமான றமழான் மாதம் நோன்பும் அதனோடு இணைந்த ஈதுல் பிதர் பண்டிகையும் மனிதன் தன்னை தூய்மைபடுத்தி இறைவனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் பிறருக்காக தர்மங்கள் செய்யும் தியாக மனப்பாங்கை நினைவூட்டுவதுடன் அதற்கான வழிகாட்டுதல்களையும் காட்டுகின்றது.
இன்றைய எமது நாட்டின் அரசியல் சமூக சூழ்நிலைக்கு இத்தத்துவங்களும் வழிகாட்டுதல்களும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. பிற சமூகத்தின் உரிமைகளை மதித்தல் விட்டுக் கொடுப்புடன் செயலாற்றுதல் தூய்மையுடன் சமூகப்பணி செய்தல் என்பன இன்றைய எமது நாட்டுக்கு தேவையான முக்கிய விடயங்களாகும் இவைகளை உரியவர்கள் கடைப்பிடிப்பவர்களாக இருந்தால் எமது நாட்டில் இனியொரு இரத்த ஆறு ஓடாது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் எமக்கு தேவையானது பரஸ்பர நம்பிக்கைகளும் பிற சமூகங்களை உரிமைகளை மதிக்கும் உயரிய பண்புமே தேவைப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் கொண்டாடப்படும் இப்பண்டிகையானது எமது நாட்டின் தேவைப்படும் சமூகத்திற்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
35 minute ago
41 minute ago