2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் ஆட்டோ தரிப்பிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாகவும் போக்குவரத்தை சீர்செய்யும் முகமாகவும் பயணிகளின் நலன் கருதியும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச சபை தெரிவித்தது.

இந்த நிதி ஆரம்பக்கட்ட நிதியாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் களுவாஞ்சிக்குடி நகரில் பஸ் தரிப்பிடங்களை அமைக்க அதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையினை முதலமைச்சர் கோரியுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், களுவாஞ்சிக்குடியில் பயணிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .