2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

யூ.என்.டீ.பி.யின் நிதியுதவியுடன் ஆயித்தியமலையில் நெற்களஞ்சியசாலை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

ஒரு இலட்சம் நெல் மூடைகளை களஞ்சியப்படுத்தக் கூடிய களஞ்சியசாலையொன்றை மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் யூ.என்.டீ.பி.யின் நிதியுதவியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் உத்தரவாத விலையில் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டும் என கோரி வரும் நிலையில் மட்டக்களப்பில் களஞ்சியம் இல்லாத நிலையில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவு செய்ய முன்வராமல் உள்ளது.

 இந்நிலையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் முயற்சியினால் யூ.என்.டீ.பி. நிதி உதவியுடன் ஆய்த்தியமலையில் சேதமடைந்த நிலையில் காணப்படும் பாரிய அரிசிஆலையுடன் காணப்பட்ட நெற் களஞ்சியத்தை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்களஞ்சியசாலையின் புனரமைப்பு வேலைகள் முடிவடைந்ததும் விவசாயிகளிடம் இருந்து நெற் சந்தைப்படுத்தும் சபையினால் உத்தரவாத விலையில் நெல் முழுமையாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வவுணதீவு பிரதேச விவசாயிகளிடம் அரசாங்க  அதிபர் சுந்தரம் அரிய நாயகம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .