2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

டளஸ் தலைமையில் மட்டு.மாவட்ட இளைஞர் அபிவிருத்தி ஒன்றுகூடல்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான அபிவிருத்தி  தொடர்பான ஒன்று கூடல்   நிகழ்வு நாளை சனிக்கிழமை பகல் 12.45 மணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக மாவட்ட தேசிய சேவைகள் மன்ற இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதிஜே.ஆர்.கலாரஞ்சனி தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள 14 பரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெருமளவு இளைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதாகவும் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .