S.Renuka / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா கதையையே மிஞ்சும் விசித்திரமான காதல் விவகாரம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பொலிஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சந்தியா பரத்வாஜ், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி அங்கித் சவுகானை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 'சட்டத்தைப் பாதுகாப்பவருக்கும் சட்டத்தை மீறுபவருக்கும்' இடையே எதிர்பாராத விதமாகக் காதல் மலர்ந்துள்ளது.
அங்கித் கொள்ளை வழக்கு ஒன்றில் சிறைக்குச் சென்றபோது, சந்தியாவின் பெற்றோர் அவருக்கு அதுல் சர்மா என்ற பொலஸ்காரருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். திருமணப் பத்திரிகைகள் கொடுக்கப்பட்டு, ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்து வந்துள்ளன. ஆனால், திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அங்கித் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். காதலனின் வருகையை அறிந்த சந்தியா, தனது நிச்சயிக்கப்பட்ட வாழ்வைத் துறந்து கடந்த சனிக்கிழமை (14) அன்று அங்கித்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பக்ஸர் நகரில் பதுங்கியிருந்த காதலர்களைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கித்தின் குற்றப் பின்னணியைச் சுட்டிக்காட்டி பொலிஸார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சந்தியா தனது முடிவில் உறுதியாக இருந்தார். "அவர் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும், அவரையே நான் திருமணம் செய்துகொள்வேன்; அவரைப் பிரிந்து வரமாட்டேன்" எனச் சந்தியா பிடிவாதம் பிடித்தார்.
இதன் விளைவாக, ஒரு பொலிஸ்காரருடன் நடக்கவிருந்த சந்தியாவின் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. கடமையைக் கண் என கருத வேண்டிய காவலரே, ஒரு குற்றவாளியைக் கரம்பிடிக்க வீட்டை விட்டு வெளியேறிய இச்சம்பவம் உ.பி. பொலிஸ் றையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago