S.Renuka / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு முடிந்தமை பெரும் மகிழ்ச்சி என தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், மகா சிவராத்திரி என்பது இருளுக்கு மத்தியில் ஞான ஒளியைத் தேடிச் செல்லும் ஆன்மீகப் பயணமாகும். அது பூஜை, பக்தி மற்றும் தியானத்தின் மூலம் மனதை சுத்தப்படுத்தி, அநீதி, அவிசுவாசம் மற்றும் அகங்காரம் என்பவற்றை களைய வழியைக் காட்டும் உன்னத இரவாகக் கருதப்படுகிறது.
சிவபெருமானை வணங்கினால் மோட்சம் உதயமாகும். ஆகையால், மகா சிவராத்திரி தினம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது பின்வாங்காமல், ஆத்ம விசுவாசத்துடன், புதிய தொடக்கத்திற்காக எழுந்திருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
மகா சிவராத்திரி நாள் உண்மை, நீதி நியாயம் மற்றும் கருணை ஆகிய மதிப்புகள் நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
அநீதிக்கு எதிராக உண்மை வெல்லும், அவிசுவாசத்தை விட ஒற்றுமை வலிமையானது, இருளை விட ஒளி வலுவானது என்பதை இந்த உன்னத நாள் நமக்கு உணர்த்துகிறது.
30 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago