2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

கோட்ட மட்ட பரிசளிப்பு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அனுருத்தன்)

கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தின் 2009/10 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட   பரிசளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை வாகரை  மகா வித்தியாலயத்தில் கோட்டகல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் தலமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரிவியம், வாகரைப் பிரதேச தவிசாளர் க.கணேசன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வாகரை 233 படைப் பிரிவின் தளபதி கேனல்.வி.என்.விரக்கேன் மற்றும் கல்வி, திணைக்கள உயர்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் தேசிய மட்ட,  மாகாண மட்டம் ஆகியவற்றில்  இணைப்பாட விதான செயற்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பல வருடங்களாக அதிகஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும்,  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்  பரிட்சை, க.பொ.த சாதரண பரீட்சையில்  சித்தியடைந்த  மாணவர்களுக்கும் கடந்த வருடத்தில்  குறைந்த  விடுமுறை (லீவு) எடுத்துக் கொண்ட  ஆசிரியர்களும் பராட்டி கெளரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .