Super User / 2010 நவம்பர் 08 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான், ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான இரவு நேர கடுகதி புகையிரத சேவை இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்று மாலை 7.45 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்கு பயணிக்கவிருந்த புகையிரதமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து இன்று காலை மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் பழுகஸ்வெல பகுதியில் இன்று மாலை தடம் புரண்டமையாலேயே இத்தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பிற்கான காலை நேர புகையிரதமும் இடைநிறுத்தப்படலாம் என மேற்படி அதிகாரி தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .