2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச தலையீடே எமது நாட்டின் பிரச்சினைக்கு காரணம்-கிழக்கு ஆளுனர்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையை ஆசியாவிலேயே முன்மாதிரியான நாடாக உருவாக்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போராடி வருகின்ற நிலையில் அந்நிய நாடுகளின் தலையீடு மற்றும் அரசியல் கட்சிகள் காரணமாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், 'அனைத்து வளங்களையும் கொண்ட அழகான நாடான இலங்கை, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஆசியாவிலேயே ஆச்சரியம் மிக்க நாடாக உருவாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். மொழி ஒன்றே எமக்கு பிரச்சினையாக உள்ளது. அதனைக் கற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்நிய நாட்டுத் தலையீடும், எமது அரசியல் கட்சிகளுமே எம் நாட்டின் பிரச்சினைக்குக் காரணமாக உள்ளன. அவை அனைத்தும் வெகு விரைவில் வெற்றி கொள்ளப்படும்.

30 வருட யுத்தம் நடந்து அனைத்தையும் இழந்த இப்பகுதி, அபிவிருத்தி செய்யப்பட்டு வருமின்றது. முதலமைச்சரின் இக்கல்வி வலய திறப்பு விழாவும் இப்பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வாக அமையும். உப என்பது தற்காலிகமே தவிர நிரந்தரமானது அல்ல விரைவில் அது கல்வி வலயமாக தரமுயர்த்தப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .