2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

சிறுவர்களுக்கான பெருநாள் பஸார்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

முஸ்லிம்களின் புனித  ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் நாளை புதன்கிழமை காத்தான்குடியில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடில்லாது சிறுவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படும் வகையில் தொடர்ந்து  5 தினங்களுக்கு பஸார் நடைபெறும்.

இந்த பஸாரினையும் அங்கு நடைபெறும் சிறுவர்களுக்கான நிகழ்வுகளையும் கண்டு களிப்பதற்காக ஏனைய பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

வழமையாக காத்தான்குடி பொதுமைதானத்தில் நடைபெறும் இந்த பஸார், இம்முறை காத்தான்குடி கடற்கரை வீதியில் நடத்துவதற்கான அனுமதியை காத்தான்குடி நகரசபை வழங்கியுள்ளது.

பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் பூரண ஒத்துழைப்புடன் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த பஸாருக்கான கடைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .