Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனையில் ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாராதிபதியினால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தை மீண்டும் பாடசாலையிடம் கையளிக்குமாறு வாழைச்சேனை ஆரம்ப நீதிமன்ற நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களால் விளையாட்டு மற்றும் தேகப் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த டிசெம்பர் 7ஆம் திகதி குறித்த விகாராதிபதி உட்பிரவேசித்து, மைதானத்தில் சுற்று வேலியை அமைத்தமையினால் சமாதான குலைவு ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில் பாடசாலை அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கிலேயே வாழைச்சேனை நீதிபதி ஏ.எம்.எம்.றியாஸ் மேற்படி உத்தரவை வழங்கினார்.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.முஹம்மட் ராசிக் ஆஜராகி வாதாடியிருந்தார்.
MOHAMAMED ALI Friday, 25 March 2011 07:28 AM
மாணவர்கள் சந்தோசமாக உள்ளனர்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .