Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மார்ச் 24 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் அனுசரணையில் கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தினால் 'பாதுகாப்பாக இருப்போம்' எனும் தொனிப்பொருளில் பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு நான்கு வரை உள்ள மாணவர்களை விழிப்பூட்டும் நோக்கில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று வியாழக்கிழமை ஓட்டமாவடி பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்பில் கனேடிய செஞ்சிலுவைச் சங்க பிரதம பயிற்றுவிப்பாளர் ஜெகதீஸன் அஸோக்குமார் மற்றும் எம்.பி.எம்.சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago