2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வடகிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்க கட்டடம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேத்திரன் திறந்து வைத்தார்.

சங்கத்தின் தலைவர் அ.தினேஸ்குமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின்  நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அங்கு உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தை வௌ;வேறாக அரசாங்கம் பிரித்தாலும் இந்த அரசாங்க  உத்தியோகத்தர் சங்கம் மாத்திரம் வடகிழக்கு இணைந்ததொரு அமைப்பாக தொடர்ந்து பேணி வருவது சந்தோசமளிக்கிறது. இவ்வாறான பலமான அமைப்புக்களை பலப்படுத்துவது ஒவ்வொரு அங்கத்தவர்களினதும் கடமையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த அமைப்புக்கு தொடர்ந்து தனது ஆதரவையும் உதவிகளையும் செய்வதற்கு தயாராகவுள்ளது என்றார்.   

இந்த மாவட்டக் காரியாலயத்திற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக பா.அரியநேத்திரன் ஐம்பதாயிரம் ரூபா நிதியதவி அளித்தார்.

இந்த அலுவலகமானது இல:- 28 றொசைறோ வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .