2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கிரான் பிரதேச சிறுபோக விவசாயிகளுக்கான ஒன்றுகூடல்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கமம் சிறுபோகம் செய்பவர்களுக்கான ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உட்பட நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமத்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர், காப்புறுதி திணைக்கள மாவட்ட பணிப்பாளர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், புவியியல் பகுதி அதிகாரிகள், கால்நடை வளர்ப்பு மாவட்ட பணிப்பாளர், கச்சேரி திட்டமிடல் அதிகாரி, கச்சேரி உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கமத்தொழில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அவ்வேளை முன்வைத்தனர். இந்நிழ்வை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தவராசா நெறிப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .