2021 ஜூன் 24, வியாழக்கிழமை

வெல்லாவெளி பிரதேச குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்படுவது செல்வராசா எம்.பியின் தலையீட்டினால் நிறுத்த

Super User   / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் மூலம் அங்குள்ள குடும்பங்களின் விபரங்களை திரட்டுதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையை மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி பிரிகேடியர் பி.செனவிரத்தினவின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கொண்டு சென்றதை அடுத்து அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்மிரர் இணையத் தளத்திற்கு தெரிவித்தாh.


இராணுவத்தினரால் கிராம சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, உறவுமுறை போன்ற விபரங்களுடன், இடம்பெயர்ந்த குடும்பங்கள், முன்னாள் விடுதலைப் விடுதலைப்புலி மற்றும் மாவீரர்குடும்பம் போன்ற விபரங்களை குடும்பத் தலைவரிடம் கோரப்பட்டன.

மேற்படி விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு இராணுவ கட்டளை அதிகாரி பிரிகேடியர் பி.செனவிரெட்ணவை நேரில் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனையடுத்து இந் நடவடிக்கையை நிறுத்துவதற்கான பணிப்புரையை பிரதேச இராணுவ அதிகாரிக்கு கட்டளை அதிகாரி  பிறப்பித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, 'ஏற்கனவே வடக்கில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்களைத் திரட்டுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடியது.

இதன் பிரகாரம் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் விபரங்களை திரட்ட இராணுவத்தினரால் படிவங்கள் வினியோகிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. இதன் காரணமாகவே இராணுவ கட்டளை அதிகாரியை நேரில் சந்தித்து இதனை அவரது கவனத்திற்கு கொண்டு வந்த போது இதனை நிறுத்துவதற்குரிய உத்தரவு உடனடியாக உரிய பிரதேச இராணுவ அதிகாரிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .