2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்டத்தில் குறும்பாதைகள் புனரமைப்பிற்கான ஆரம்பநாள் நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறும் பாதைகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கல்வி அபிவிருத்தி சங்க ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொறியிலாளர் கே.ரட்னம், கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் தேவசிங்கம் உட்பட உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 44 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளும் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ஐநூறு ரூபா வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் குறுக்கு வீதிகள்,  மற்றும் மணற் பாதைகள் என்பன புனரமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .