Menaka Mookandi / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆபாச படங்களை விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளில் உள்ள கையடக்கத் தொலைபேசிகளுக்கு பாட்டு மற்றும் படங்களை விற்பனை செய்யும் கடைகள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது நான்கு கடைகளில் இருந்து நான்கு கணணிகளும் இருவட்டுக்களுடன் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நாளை வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
18 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
7 hours ago