Super User / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக கருவாடு, மாசி புகைக்கருவாடு தயாரிக்கும் நடவடிக்கையும் ஜாடி மீன் பதப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழகாட்டலிலும் திவிநெகும திட்டத்தின் கீழும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைக்கமைய இது தொடர்பான செயற்பாட்டுடன் கூடிய பயிற்சிச் செயலமர்வு கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.
நாரா மற்றும் நெக்டா நிறுவனங்களின் அனுசரணையுடன் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்த பயிற்சிச் செயலமர்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் நாரா நிறுவனத்தின் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் கலாநிதி சுஜீவா ஆரியவன்ஸ விரிவுரையாற்றினார்.
.jpg)
.jpg)
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago