Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
ஜெயிலானியிலுள்ள தர்ஹாவும் அதனோடுள்ள பள்ளிவாயலும் பேரினவாதிகளின் அடுத்த இலக்காகக் காணப்படுகிறது என்று உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச மத்திய குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்,
'நாங்கள் கப்று வணக்கம் (சமாதிகளை வழிபடுதல்) செய்பவர்களல்ல. ஆனால் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.
பல நூற்றாண்டுகள் பலமை வாய்ந்த அநுராதபுரத்திலுள்ள ஸியாரம் (சமாதி) மற்றும் பள்ளிவாயல் என்பன பேரின வாதிகளினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளன. இன்று முஸ்லிம்களுக்கெதிராக இலங்கையில் ஜாதிக ஹெல உறுமயவினால் 18 இணைய தளங்கள் நடத்தப்படுகின்றன. இதில் பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானியிலுள்ள ஸியாரமும் அதனோடுள்ள பள்ளிவாயலுமாகும் என கூறப்படுகின்றது.
இலங்கையில் பல கிராமங்களில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம்களின் அடையாளச் சின்னங்களை இலக்கு வைக்கும் வேலைகளில் பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்காமல் இருக்கவில்லை. அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தாலும் தனித்துவமாகவே இருக்கின்றோம். நாம் கல்முனை மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் தனித்துவமாக எமது கட்சியில் களம் இறங்கியுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பத்தில் நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தக்கட்சியை யாரும் அழித்துவிட முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெறக் கூடிய வாயப்பு தொடாந்து இருந்து வருகின்றது.
இம்மாவட்டத்தில் தனித்தனி முஸ்லிம் அரசியல் வாதிகள் பலவீனப்பட்டு போவார்கள். இந்தக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வழங்கும் கட்சி என்பதை கடந்த காலங்களில் நிரூபித்துக்காட்டியுள்ளது.
காத்தான்குடி மற்றும் ஏறாவூர், கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளடங்களாக மாவட்ட ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மாவட்ட மத்திய குழுவை உருவாக்கி அதனூடாக பல் வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும்' என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, உட்பட கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கட்சியின் பிரதேச முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
pasha Tuesday, 20 September 2011 06:01 PM
இவர் மக்களிடம் ஒன்று சொல்வார் அரசிடம் வேறொன்று சொல்வார். இவரை இன்னும் நம்பும் கூட்டம் இருக்கின்றது.
Reply : 0 0
bis Tuesday, 20 September 2011 06:28 PM
நல்ல செய்திதானே. நாம் செய்யத் தவறியதை அல்லாஹ் அவர்களைக் கொண்டு செய்விகின்றான். மாஷா அல்லாஹ்!
Reply : 0 0
AJMAL From thambala Tuesday, 20 September 2011 07:04 PM
விழிப்புணர்வுடன் இருக்கிறார் போல...........
Reply : 0 0
AJMAL From thambala Tuesday, 20 September 2011 07:19 PM
சரியா சொன்னிங்க.............
Reply : 0 0
xlntgson Tuesday, 20 September 2011 09:27 PM
bisக ருத்து சொல்கிறவர்கள் மற்றவர்களின் கருத்தை படித்து அதற்கு பதில் கூறவேண்டும் கருத்து சொல்லிக்கொண்டே போகக்கூடாது உதவாக்கரையாக, நான் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் இல்லை இந்த கல்லறை விவகாரத்தில் சிலர் செவிப்புலன் அற்றவர்கள் போல காதில்விழுந்தும் விழாமல் நடப்பது புதினம். நபிமார்கள் மட்டும்தான் இறைவனிடத்தில் சிபாரிசு செய்ய வல்லவர்கள் என்றால் அவர்கள் சிபாரிசு செய்து விட்டார்கள் ஆதலின் நீங்கள் உங்கள் பெற்றோர் பிள்ளைகளை சிபாரிசு செய்ய மாட்டீர்களா?
ஷீயா சொன்னியாக சொன்னி ஷீயாவாக மாற இயலாதா, அவ்வளவு கடினம்?
Reply : 0 0
Nafeel Tuesday, 20 September 2011 11:12 PM
கப்ரு வணக்கம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது உள்ள பிரச்சினை அதுவல்ல. இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் முஸ்லிம்களுக்குள் உள்ள பிரிவை அறியமாட்டார்கள். அவர்களுக்கு உடைப்பது ஒரு முஸ்லிம் வனக்கஸ்தலமே. இன்று சியாரமாக இருந்தாலும் நாளை ஏன் ஒரு பள்ளிவாசலாக இருக்க மாட்டாது? இந்த பிரிவினையே நமக்கு எதிராக மாறும்.
Reply : 0 0
shafi Wednesday, 21 September 2011 12:19 AM
nafeel அவர்களே நீங்கள் கூறியது சரியே. bis சொன்னதும் மிகவும் சரியே. உடைகபட்டது நல்ல விடயம். ஆனால் அல்லாஹ்வின் மாளிகையில் கையை வைத்தால் முஸ்லிம்கள் என்றால் யார் என்று புரியும் அந்த நபர்களுக்கு. அல்லாஹு அக்பர் ... அல்லாஹு அக்பர்..
Reply : 0 0
IBNU ABOO Wednesday, 21 September 2011 02:48 AM
அல்லாவுடைய நல்லடியார்கள் எனப்படும் இறைநேசர்கள் இங்கே கருத்து சொல்பவர்களை போல் அல்லாவை மறந்தவர்களா? அவர்கள் சியாரம் கேட்டார்களா? அல்லா அவர்களை நேசித்ததை கண்ட உண்மை முஸ்லிம்கள் அந்த சியாரன்களை அமைத்தார்கள். இஸ்லாத்துக்கு எதிராக எழுந்த மேற்குலக சதிகாரர்களின் கைப்பாவையாக செயல்பட்ட வஹபிகள் தான் கப்ருகளை உடைத்து நல்லடியார்களின் உடல்களை வெளியேற்ற முயற்சித்து கப்ரு வணக்கம் என்ற பதத்தை உருவாகினார்கள். நபிகள் நாயகம் sal . அவர்களது கப்றையே அகற்ற முயற்சித்த பாவிகள் தான் இந்த வஹாபிகள். இஸ்லாத்தின் விரோதிகள் .
Reply : 0 0
Mohammed Hiraz Wednesday, 21 September 2011 03:31 AM
அது உடைக்கப்பட்டாலும் அபோதும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!!! அந்த நிகழ்வு நடை பெற்ற பின்பும் இதே மாதிரி ஒரு இடத்தில் அதற்கடுத்த இலக்கை பற்றி சம்மந்தம் இல்லாத இடத்தில், எதுவும் செய்திட முடியாத நபர்களிடம் கதைக்கத்தான் உங்களால் முடியும். வேறு என்ன செய்ய முடியும்?
இல்லை எங்களால் முடியுமெனில் இப்போது நடைபெற்ற சம்பவங்களை இங்கே கதைது கொண்டிருக்காமல் முதலில் உலக மனித உரிமை கழகங்கள்இ சமத்துவத்துக்காக பாடுபடுவோர், ஐக்கிய நாடுகள் நிறுவனம், சகல தூதரகங்கள், சகல நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் கவனத்துக்கு கொண்டுவாருங்கள். அவர்கள் நீங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததும் தடுத்து நிறுத்துவார்களோ இல்லையோ இப்படி ஒரு பாரிய இன, மத துவேச வேலைகள் இலங்கையில் மீண்டும் தொடங்கி உள்ளது என்பதை குறைந்த பட்சம் ஆதாரங்களுடன் அறிந்து கொள்வர்கள். ஆயிரம் கதவை தட்டின் ஒரு கதவு கூடவா திறக்காது? எமக்கு நடக்கும் அநீதிகளை சர்வதேச கவனத்திட்கு கொண்டுவந்தால்தானே வரும் சர்வதேச பிரதிநிதிகள் எங்களையும் சந்திப்பர் ??? நாங்கள் எதையுமே சர்வதேச கவனயீர்ப்புக்கு கொண்டு செல்லாமல் இருந்து விட்டு வரும் சர்வதேச பிரதிநிதிகள் தங்கள் பிரச்சினைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்த தமிழ் பிரதிநிதிகளை சந்தித்து விட்டு முஸ்லிம் தரப்பை சந்திக்காமல் போகும் போது புலம்புவதில் அர்த்தம் இல்லைதானே??? நாம் அவர்களின் கவனத்துக்கு கொண்டுபோகாத விடயம் குறித்து அவர்கள் எங்களுடன் கலந்துரையாட வேண்டுமென அறிக்கை விடுவது நியாயமான செயல் இல்லை.
Reply : 0 0
Anwer Noushard Wednesday, 21 September 2011 03:33 AM
இவ்வளவுதான் முஸ்லீம்ஸ். எப்படியாவது கமெண்ட்ஸ் பண்ணனும். அன்பு சகோதரங்களே, சஹோதரர் பசீர் சேகுதாவூத் அவர்களின் அரசியல் பயணத்தில் நல்ல முதிர்ச்சியும் தெளிவும் கடந்த சில மாதங்களாக தெரிகிறது. எதையும் சரியாக ஒருவர் செயும் பொது அவர் எவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது மனிதனின் ஆறாம் அறிவு. அறிவோடு நடந்து எதிர்காலத்தை வாழ்த்துவோம் .
Reply : 0 0
rozan Wednesday, 21 September 2011 05:42 AM
இவர் இதனை பாரளுமன்றத்தில் பேசலாமே ??
Reply : 0 0
shafi Wednesday, 21 September 2011 03:26 PM
sridharan mp போல் இவர்களும் பாராளுமன்றத்தில் பேசட்டும் அப்புறம் ஆதரிப்போம்
Reply : 0 0
Riyal A.M Wednesday, 21 September 2011 05:01 PM
பாராளுமன்றத்தில பேசினா சீட்ட கிழிப்பாங்க .....
Reply : 0 0
islam Wednesday, 21 September 2011 06:31 PM
neengallam vela illa
Reply : 0 0
xlntgson Wednesday, 21 September 2011 09:27 PM
அப்துல்லாஹ் யூசுப் அலி எழுதிய குர் ஆன் ஆங்கிலப் பதிப்பு உலகில் மிக அதிகமான முஸ்லிம் அல்லாதோர் படித்து இஸ்லாத்துக்கு வரக் காரணமான ஒரு மொழிபெயர்ப்பு. அதை கூட்டி குறைத்து சவுதி அரசும் இலவசமாக வெளியிட்டிருக்கிறது. அவர் ஒரு ஷீயா தாவூதி போரா, சொன்னியாக மாறியவர். அவர் சிலகாலம் கிறிஸ்தவராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அவரது மனைவியர் கிறிஸ்தவப் பெண்கள். இரு விவாகம் புரிந்தவர், முதல் திருமணம் விவாக ரத்தாகி (ஷீயா சொன்னி ஆகா என்பது போல எனது கருத்தை மறைத்திருக்கின்றனர்) ஷீயா சொன்னி பிளவே முஸ்லிம் பிரச்சினை.
Reply : 0 0
Akkaraipattu Friday, 23 September 2011 06:52 AM
தம்பி பசீர் ......செல்றதே சரியாய் செல்லு , சரியான இடத்தில் சொல்லு ராசா......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
1 hours ago