2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று (05) வாழைச்சேனை சமூக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் இணைப்பாளர் எஸ்.ஒளியன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வை  முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளாக உள்ள பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம், இயற்கை அனர்த்தம், பிறப்பு மற்றும் விபத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்ட 470 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .