2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு வரவேற்பு

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்


வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தனது பிரதேசத்துக்கு வருகை தந்ததையொட்டி அவரை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் வெள்ளிக்கிழமை (30) ஓட்டமாவடியில் இடம் பெற்றது.


ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில்,  ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற  கூட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீன், கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .