Menaka Mookandi / 2015 பெப்ரவரி 06 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ வீரர், கடமையை முடித்துக்கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக இராணுவ வீரர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில், மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருநாரத்ன என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025