Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை பெய்வதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (10) காலை 8.30 மணியிலிருந்து முதல் புதன்கிழமை (11) காலை 5.30 மணிவரையான 21 மணிநேரத்தில் 28..6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
அடை மழை காரணமாக காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ளத தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வடிகான்கள் நிரம்பி வழிவதையும் அவதானிக்கமுடிகின்றது.
மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், மீன்பிடி வள்ளங்களும் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்;ளதையும் அவதானிக்கமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .