2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கடலுக்கு சென்ற 3 மீனவர்களை காணவில்லை என முறைப்பாடு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், ராக்கி, எல்.தேவ்)
 
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி கல்குடா கடலோரத்திலிருந்து இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளத்தில் இவர்கள் கடற்றொழிலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பேத்தாழையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவராசா (வயது 53), அவரது  மகன் சிவராசா ஜீவராஜ் (வயது 20)  மற்றும் செல்லப்பா மனோகரன் (வயது 45)  ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்திடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
 
குறித்த மீனவர்கள் வழமையாக மீன் பிடித் தொழிலுக்குச் சென்றால் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வது வழமை என்றும், கடந்த சில நாட்களாக தொடர்புகள் எதுவும் இல்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனிடம் தெரிவித்ததையடுத்து அவர் இது தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பாக காணாமல் போனவர்களை கண்டுபிடிக்குமாறு கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .