2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடிவடிக்கை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 39 வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவொன்று,  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள வர்த்தக நியைங்களில் கடந்த இரண்டு , மூன்று தினங்களாக  திடீர்சோதனையை மேற்கொண்டது.

இதன் போது நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்களை விற்பணை செய்யாமை,   விலைப்பட்டியல் காட்சிக்கு வைக்காமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை போன்றவைகள் கண்டு பிடிக்கப்பட்டன.

இச்செயற்பாடுகளில் ஈடுப்பட்ட மட்டக்களப்பு, செங்கலடி,  காத்தான்குடி,  ஏறாவூர், ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த 39 வர்த்தகர்களுக்கெதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .