2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 50 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் யாவும் நிறைவடைந்த நிலையில் 2011ம் ஆண்டு 50,000 ஏக்கரில் சிறுபோக செய்கை பண்ணப்படுவதற்கான் கணிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சிறுபோகத்துடன் ஒப்பிடும்போது 1,000 ஏக்கர் அதிகமானதெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த பெரும் போகத்தின் போது இம்மாவட்டத்தில் இரு தடவைகள் ஏற்பட்ட வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட நெற்செய்கையாளர்கள் சிறுபோக செற்செய்கை மேற்கொள்வார்களாயின் அவர்களுக்கு ஏக்கரொன்றிற்கு இரண்டு புசல்வீதம் இலவசமாக விதைநெல் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .