2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் 80% மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படவில்லை-பொன் செல்வராசா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த இடம்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 80 சதவீதமான குடும்பங்களுக்கு இதுவரையில் வாழ்வாதார உதவித் தொகையான 25ஆயிர ரூபா இன்னமும் வழங்கப்படவில்லை என்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கவலை வெளியிட்டுள்ளார்.

மீள்குடியேற்றத்தின்போது குறிப்பிட்ட தொகைய வழங்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ள போதிலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள 36ஆயிரத்து 181 குடும்பங்களில் 7,267குடும்பங்களுக்கு மாத்திரமே இத்தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர வன்னியில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட 1,066 குடும்பங்களில் ஒரு குடும்பத்திற்கு கூட இந்த நிவாரணக் கொடுப்பணவு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், வாகரை பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள சகல குடும்பங்களுக்கும் இத்தொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிரான், கொக்கட்டிச்சோலை, வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச செயலகப் பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கேனும் இந்த கொடுப்பணவு வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .