2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா, வ.சக்தி

அண்மையில் வெளியான 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி தேசிய
நிலைப்படுத்தலில் கிழக்கு மாகாணம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், அகில
இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து குறித்த பரீட்சைக்கு 2,056 மாணவர்கள் தேற்றியிருந்த
நிலையில், 1,789 மாணவர்கள் க.பொ.த.உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் எட்டாம் நிலையில் இருந்த கிழக்கு மாகாணம், இம்முறை நான்காம்
இடத்திற்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியான செய்தி என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்
திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

பரீட்சை திணைக்களத்தின் தேசிய ரீதியிலான பகுப்பாய்வு வெளியான நிலையில் மேற்படி
கருத்தை தெரிவித்ததுடன், தேசிய ரீதியில் 100 வலயங்களிலே மட்டக்களப்பு வலயம் முதலிடத்தை
பெற்று மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளது என்றார்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X