2025 மே 15, வியாழக்கிழமை

அடுத்தவரின் கௌரவத்தை அங்கிகரித்தால் ‘அமைதியை நிலைநாட்டலாம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமக்கு அருகிலுள்ளவர் சாதி, சமயம், இனம், மொழி என்று எந்தப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்தவரைக் கண்ணியப்படுத்தி கௌரவிக்கக் கற்றுக் கொண்டால், அமைதியை நிலைநாட்டலாமென, ஆசிய மன்றத்தின் சமாதானத்துக்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் தெரிவித்தார்.

சமாதானம் நல்லிணக்கம் தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (28) இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதச் செயற்குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து, மாணவர்களுக்கு நல்லிணக்கத்துக்கான சிந்தனைக் கருத்துகளை முன்வைத்த செலினா கிறேமர், சமாதானம், மதிப்பளித்தல், இரக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, பரஸ்பர உதவி, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விடயங்களில், தனி நடவடிக்கைகள், குழுச் செயற்பாடுகள் மூலமாக விழிப்புணர்வூட்டினார்.

மேலும், மாணவர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தலைசிறந்த விழுமியப் பண்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், அடுத்தவரை அங்கிகரித்து கௌரவித்து கண்ணியமாக நடத்தும் மனப்பாங்கைச் செயற்பாட்டில் காட்ட முடியும் எனவும், அதன்மூலமே, எல்லோரும் சமமானவர்கள் என்ற பற்றுறுதியோடு, எல்லோருக்கும் நீதியையும் இணக்கப்பாட்டையும் உருவாக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

“நமது நாட்டின் தற்போதைய சூழலில், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால், நிலைமை எவ்வளவு கௌரவமாகவும் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

“சிறந்த விழுமியங்களைக் கடைப்பிடித்தொழுகக் கற்றுக் கொண்டால், எதிர்கால இலங்கை, சுபீட்சமும் அமைதியும் மிக்கதாய்த் திகழும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .