Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி மாணவர்களும் மற்றும் பெற்றோரும் இணைந்து பாடசாலை அதிபரின் வருகையைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை (26) பாடசாலையின் முன் வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் அதிபரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் குறித்த பாடசாலயில் கடமை புரியலாம் என்ற நீதி மன்றம் வழங்கிய ஆணையின் கீழ், நேற்று (25) பாடசாலைக்கு சமூகமளித்து பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
இதையடுத்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டாம், பாடசாலையைச் சீரழிக்காதே, எதிர்கால சமூகத்தை சீரழிக்காதே, சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, கல்வி கற்கும் உரிமையைப் பறிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
22 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
53 minute ago