Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 14 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட கருவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரிக்கு, அதிபரொருவரை மிக விரைவில் நியமிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரை, இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் என்.விஷ்ணுகாந்தனும் அப்பாடசாலையின் பெற்றோரும், திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, இன்று (14) சந்திந்துக் கலந்துரையாடினர்.
இதன்போதே, கல்வியமைச்சின் செயலாளருக்கு இப்பணிப்புரையை, ஆளுநர் விடுத்தார்.
இப்பாடசாலையில் 359 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் எனவும், 37 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரெனவும், உயர்தர வகுப்புகள் இருந்தபோதிலும், இப்பாடசாலைக்கு 9 மாதங்களாக அதிபரொருவர் இல்லாமையால், பாடசாலையின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதெனவும், பெற்றோர்கள், ஆளுநரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதனையடுத்து, அதிபரை மிக விரைவில் நியமிக்குமாறு, கல்விச் செயலாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
37 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago