2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அநாகரிகமாக நடந்துகொண்டவருக்கு சிறை

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு - கன்னங்குடா பிரதேசத்தில் மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட நபரொருவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனையும் 6,000 ரூபாய் அபராதமும் 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த திணைக்களத்தில் சமுதாய சேவையில் ஈடுபடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மணிக்கவாசகர் கணேசராசா செவ்வாய்க்கிழமை(08) உத்தரவிட்டார்.

கன்னங்குடா பிரதேசத்தில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில், குறித்த நபரை வவுணதீவுப் பொலிஸார், செவ்வாய்கிழமை(08) கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X