Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை வலுவடைத்துள்ளதன் காரணத்தால் மட்டக்களப்பு மாநகர சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரது விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் அனைவரும் அனர்த்தக் குறைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்ற உத்தரவை மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் குறித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் கடந்த சில நாள்களாக மாநகர சபையின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா, நொச்சிமுனை, உப்போடை, கூழாவடி, தாண்டவன்வெளி, உப்போடை, ஊறணி, இருதயபுரம், கறுவேப்பங்கேணி, நாவற்கேணி, கொக்குவில் உட்பட பெருமளவிலான பகுதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில், மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் மும்முரமாக ஈடுபட்டமையைக் காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை, இப்பணிளில் மட்டக்களப்பு மாநகரசபை மேயர், பிரதி டீமயர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் இணைந்து கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago