Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தற்போது நிலவும் அனல் வெப்பக் காலநிலை காரணமாக தீ மூட்டுவதிலும் அடுப்பெரிப்பதிலும் அதிக அக்கறையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
தகிக்கும் உஷ்ணத்தின் காரணமாக ஈரலிப்புத் தன்மை என்பது இல்லாமற் போய் விட்டிருக்கின்றது. புற் தரைகள் கருகிப்போயுள்ளன. நீர் நிலைகள், கிணறுகள் என்பனவும் வற்றி விட்டிருக்கின்றன. காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை வெயிலின் அகோரம் சாதாரணமானதை விட பல மடங்கு உணர முடிகின்றது.
இவ்வேளையில், சிறிய தீப்பொறியும் எளிதில் பரந்து பற்றிப்பிடித்து விடக் கூடிய ஆபத்து இருப்பதால் கிராமப் புறங்களில் திறந்த வெளியில் அடுப்பெரிப்பதையும் குப்பைகளுக்குத் தீ வைப்பதிலும் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர்.
வீதியோரங்களிலுள்ள கருகிப்போன புற்தரைகளில், சருகுகளில் புகைத்து விட்டு தீயுடன் சிகரெட் மீதியை வீச வேண்டாம் என்றும் பொலிஸார் புகை பிடிப்பவர்களைக் கேட்டுள்ளனர். கருகிப்போன புற் தரைகளில் பற்றிக் கொள்ளும் தீ காட்டுத் தீயாக மாறினால் அது பேரழிவுகளைத் தருமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக வரட்சி காரணமாக கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளும் அவஸ்தைப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025