2025 மே 08, வியாழக்கிழமை

‘அனைவருக்கும் சம சலுகைகள்’

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

நாட்டிலுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கின்றனவே அதே சலுகைகள் சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெருமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

தேத்தாத்தீவு கிராமத்துக்கு, இன்று (24)  விஜயம் செய்த அவர், அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் இலஞ்சம் பெற்று, ஊழல் செய்ததால் அதிகளவான சிறுபான்மையின மக்களுக்கு, அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்கவில்லை எனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த ஆட்சியைப் பற்றிச் சிறுபான்மையின மக்களுக்கு அதிகளவு தப்பான அபிப்பிராயங்கள் இருந்தன. இனிவரும் காலங்களில் எமது மக்கள் அவ்வாறான தப்பான அபிப்பிராயங்களிலிருந்து விடுபட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X