2025 மே 09, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனைப் பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று (03) நடைபெற்றது.

இவ்வருடம் மண்முனைப் பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், கல்வி சுகாதார, சமுர்த்தி, வாழ்வாதாரம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

மண்முனைப் பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறீநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X