Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஜம்மியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும் கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல் அழ்பர் ஜும்மா பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளருமான சங்கைக்குரிய மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ்வின்; ஜனாஸா, வியாழக்கிழமை மாலை காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இவரின் மறைவையொட்டி காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்தியா தமிழ்நாடு அதிராம்பட்டினத்தைப் பிறப்பிடமாகவும் இலங்கை காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்த மார்க்க அறிஞர் புதன்கிழமை தனது 86 வது வயதில் காலமானார்.
உள்நாட்டு, வெளிநாட்டு சமூகப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், மார்க்க அறிஞர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025