Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எட்டப்படும் தீர்மானங்கள் பேச்சளவில் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அதுதொடர்பாக நாங்கள் கவனமாக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
'கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தில் 18 கிராம சேவகர் பிரில் நுற்றுக்கணக்கான கிராமங்கள் காணப்படுகின்றன. இதில் பெரும்பாலனவை அடிப்படை வசதிகள் இல்லாத மிகவும் பின்தங்கி காணப்படுகின்றன. கடந்த ஆண்டு பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அரைவாசிகூட அடிப்படை வசதிகள்கூட முடிக்கப்படவில்லை. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை சுகாதார வசதிகள் இன்மை என பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கடந்த காலத்;தில் நகர் பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்காக காட்டப்பட்ட அக்கறை படுவான்கரைப்பிரதேசங்களில் காட்டப்படவில்லை 2017ஆம் ஆண்டிலே அரசியல்வாதிகள் திணைக்கள தலைவர்கள் எல்லோரும் இணைந்து இந்த பிரதேசத்தை அபிவிருத்து செய்வதற்காக மிகவும் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.
சில அரச திணைக்களங்கள் கடந்த வருடம் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களை புறக்கணித்து வந்துள்ளன. இந்த நிலமை இந்த ஆண்டும் தொடரக்கூடாது. சில அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பேசும்போது கூட அவர்கள் சரியான பதிலைத் தருவதில்லை.
எல்லைப் பகுதிகளில் வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் எமது மாவட்டத்திற்கு வந்து காடுகளை அழிப்பது திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்வது பரம்பரையாக பண்ணையார்கள் கால்நடை வளர்த்த பகுதிகளில் அத்துமீறி நுழைந்து பண்ணையாளர்களைத் தாக்குவது கால்நடைகளை துப்பாக்கியால் சுடுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிக்கிறது.
மாவட்டத்துக்கு நிதி வரும்போது மாவட்டங்களுக்கு சமனாக பங்கிடும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என்றார்.
8 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
45 minute ago